மிதிலைக் காட்சிப் படலம் - 639
சந்திரோதயத்தைப் பழித்தல் (639-640)
சீதை திங்களைப் பழித்தல்
639.
‘நீங்கா மாயை அவர் தமக்கு
நிறமே தோற்றுப் புறமே போய்.?
ஏங்காக் கிடக்கும் எறி கடற்கும்.
எனக்கும். கொடியை ஆனாயே-
ஓங்கா நின்ற இருளாய் வந்து.
உலகை விழுங்கி. மேன்மேலும்
வீங்கா நின்ற கரு நெருப்பின்
இடையே எழுந்த வெண் நெருப்பே!
ஓங்கா நின்ற- வளர்கின்ற; இருள் ஆய் - இருளின் வடிவமாய்;
வந்து - வந்து; உலகை விழுங்கி - உலக முழுவதையும் கவர்ந்து;
மேன் மேலும் - மேலும் மேலும்; வீங்கா நின்ற - வளாச்சி
அடையும்; கரு நெருப்பின் இடையே - கரிய தீயின் இடையே;
எழுந்த - தோன்றும்; வெண்நெருப்பே - வெண்ணிறமுள்ள
நெருப்பே; நீங்காமாயை - நீங்காத மாயையை; அவர் தமக்கு
- செய்து வரும் அந்த உத்தமனுக்கு; நிறமே தோற்று - நிறத்தால்
தோல்வியுற்று; புறமே போய் - (உலகிற்குப்) புறம்பாகச் சென்று;
ஏங்காக் கிடக்கும் - ஏங்கிக் கிடக்கின்ற; எறி கடற்கும் - அலை
வீசுகிற கடலுக்கும்; எனக்கும் - (காம வேதனையால் வருந்தும்)
எனக்கும்; கொடியயை ஆனாயே - (நீ) கொடுஞ்சொல் புரிவாய்
ஆயினை
பிரிந்தவர்களுக்குத் தென்றல். சந்திரன் ஆகியவை காதல் நோயை
மிகுவிக்கும் பொருள்கள் துயரத்தை விளைத்தலால் அன்னவர்
அவற்றை வெறுத்துக் கூறுதல் இயற்கை. சந்திரன்: தன் காம
வேதனையை மிகச் செய்தும். கடலைப் பொங்கச் செய்தும்
அலைத்தலால் சந்திரனை நோக்கிக் ‘கடற்கும்’ எனக்கும் கொடியை
ஆனாயே’ என்றாள் சீதை. ஏங்காக் கிடத்தல்: (சிலேடையாக) ஒலித்தல்
ஏங்கிக் கிடத்தல். ‘மாயை யவர்தமக்கு நிறமே தோற்று’ - கடலின் கரு
நிறத்தைக் காட்டிலும் இராமனது திருமேனி நிறமே மிகக்
கறுத்துள்ளது. 76
