மிதிலைக் காட்சிப் படலம் - 641

bookmark

காமவேதனை (641-644)

காதல் நோயால் சீதை பட்ட துன்பம்
 
641.

மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
மோது மத்திகை மென் முலைமேல் பட.
ஓதிமப் பெடை வெங் கனல் உற்றென.
போது மொய்த்த அமளிப் புரண்டான் அரோ!
 
மீது - வானில்; மொய்த்து எழு - நெருங்கி எழுகின்ற;  நிலவின்
கதிர் - வெண்ணிலாவின் கதிர்களாகிய; மோது மத்திகை - அடிக்கும்
சம்மட்டி; மென்முலை  மேல்  பட-  தன் மெல்லிய தனங்கள்  மேல்
படுதலால்;  ஒதிமப் பெடை -  (சீதை) பெண் அன்னம்;  வெம்கனல்
உற்றென  -  கொடிய   நெருப்பிலே  அகப்பட்டுதுபோல;    போது
மொய்த்த -  தாமரை  மலர்கள்  நிறைந்த;  அமளி   புரண்டாள் -
படுக்கையில் விழுந்து புரண்டாள்.

சந்திரனைச்  சம்மட்டி என்றதால் மென்முலை அதை  எறிதற்குரிய
பட்டடை ஆயிற்று. போது மொய்த்த அமளி அவளுக்குத்  தீ பரப்பிய
குண்டமாயிற்று.  தற்குறிப்பேற்றவணி.  தாமரை  மலர்ப்   படுக்கையில்
சீதை  புரண்டதற்கு  ஒப்புமை அமையப் பெடையன்னம்  நெருப்பிலே
பொருந்தியது போலும் என்றார்.                             78