மிதிலைக் காட்சிப் படலம் - 645
கவிக்கூற்று
645.
கன்னி நல் நகரில். கமழ் சேக்கையுள்.
அன்னம். இன்னணம் ஆயினள்; ஆயவள்.
மின்னின் மின்னிய. மேனி கண்டான் எனச்
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம்.
கன்னி நல் நகரில் - அழகிய கன்னி மாடத்தில்; கமழ்
சேக்கையுள் - மணம் வீசும் மலர்ப்பள்ளி மெத்தையில்;
அன்னம் -அன்னப்பெடை போன்ற சீதை; இன்னம் ஆயினள் -
இவ்வாறு காம வேதனை அடையலானாள்; ஆயவள் - (இனி)
அச்சீதையினது;மின்னின் மின்னிய மேனி - மின்னலைப் போல
விளங்கும் திருமேனியை; கண்டான் எனச் சொன்ன - பார்த்தான்
என்று மேலே கூறிய; அண்ணலுக்கு - இராமனுக்கு; உற்றது - உற்ற
நிலைமைகளை;சொல்லுவோம் - (இனிக்கூறத்) தொடங்குவோம்.
கன்னி மாடம் பெரிய நகரம் போல் விளங்கியதால் ’கன்னி
நன்னகர்’ என்றார். மின்னிய மேனியை - பெயரெச்சம். 82
