மிதிலைக் காட்சிப் படலம் - 639

bookmark

சந்திரோதயத்தைப் பழித்தல் (639-640)

சீதை திங்களைப் பழித்தல்
 
639.

‘நீங்கா மாயை அவர் தமக்கு
   நிறமே தோற்றுப் புறமே போய்.?
ஏங்காக் கிடக்கும் எறி கடற்கும்.
   எனக்கும். கொடியை ஆனாயே-
ஓங்கா நின்ற இருளாய் வந்து.
   உலகை விழுங்கி. மேன்மேலும்
வீங்கா நின்ற கரு நெருப்பின்
   இடையே எழுந்த வெண் நெருப்பே!
 
ஓங்கா நின்ற- வளர்கின்ற; இருள் ஆய் - இருளின்  வடிவமாய்;
வந்து  -  வந்து; உலகை விழுங்கி - உலக முழுவதையும்  கவர்ந்து;
மேன் மேலும்  -  மேலும்  மேலும்;  வீங்கா  நின்ற -   வளாச்சி
அடையும்; கரு நெருப்பின் இடையே  -  கரிய   தீயின்  இடையே;
எழுந்த  -  தோன்றும்;   வெண்நெருப்பே  -   வெண்ணிறமுள்ள
நெருப்பே; நீங்காமாயை  -  நீங்காத மாயையை;    அவர் தமக்கு
- செய்து வரும் அந்த உத்தமனுக்கு;  நிறமே  தோற்று  - நிறத்தால்
தோல்வியுற்று;  புறமே  போய் -  (உலகிற்குப்)  புறம்பாகச் சென்று;
ஏங்காக் கிடக்கும் - ஏங்கிக் கிடக்கின்ற;  எறி கடற்கும்  - அலை
வீசுகிற  கடலுக்கும்;  எனக்கும் -  (காம  வேதனையால்  வருந்தும்)
எனக்கும்; கொடியயை  ஆனாயே -  (நீ)  கொடுஞ்சொல்  புரிவாய்
ஆயினை   

பிரிந்தவர்களுக்குத் தென்றல். சந்திரன் ஆகியவை காதல்  நோயை
மிகுவிக்கும்   பொருள்கள்   துயரத்தை   விளைத்தலால்  அன்னவர்
அவற்றை   வெறுத்துக்   கூறுதல்   இயற்கை.  சந்திரன்:  தன்  காம
வேதனையை   மிகச்   செய்தும்.   கடலைப்   பொங்கச்   செய்தும்
அலைத்தலால்  சந்திரனை  நோக்கிக்  ‘கடற்கும்’ எனக்கும் கொடியை
ஆனாயே’ என்றாள் சீதை. ஏங்காக் கிடத்தல்: (சிலேடையாக) ஒலித்தல்
ஏங்கிக் கிடத்தல். ‘மாயை யவர்தமக்கு நிறமே தோற்று’ - கடலின் கரு
நிறத்தைக்    காட்டிலும்    இராமனது   திருமேனி   நிறமே   மிகக்
கறுத்துள்ளது.                                            76