மிதிலைக் காட்சிப் படலம் - 645

bookmark

கவிக்கூற்று

645.

கன்னி நல் நகரில். கமழ் சேக்கையுள்.
அன்னம். இன்னணம் ஆயினள்; ஆயவள்.
மின்னின் மின்னிய. மேனி கண்டான் எனச்
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம்.
 
கன்னி  நல்  நகரில்  -  அழகிய   கன்னி  மாடத்தில்;  கமழ்
சேக்கையுள் -    மணம்    வீசும்    மலர்ப்பள்ளி    மெத்தையில்;
அன்னம்   -அன்னப்பெடை  போன்ற சீதை; இன்னம் ஆயினள் -
இவ்வாறு  காம  வேதனை  அடையலானாள்;  ஆயவள்  -  (இனி)
அச்சீதையினது;மின்னின் மின்னிய மேனி  -  மின்னலைப்   போல
விளங்கும் திருமேனியை;  கண்டான் எனச் சொன்ன -  பார்த்தான்
என்று மேலே கூறிய; அண்ணலுக்கு - இராமனுக்கு; உற்றது -  உற்ற
நிலைமைகளை;சொல்லுவோம் - (இனிக்கூறத்) தொடங்குவோம்.   

கன்னி மாடம் பெரிய   நகரம்   போல்  விளங்கியதால்  ’கன்னி
நன்னகர்’ என்றார். மின்னிய மேனியை - பெயரெச்சம்.          82