மிதிலைக் காட்சிப் படலம் - 648
வணங்கிய இராமனை வாழ்த்திச் சதானந்த
முனிவன் கோசிகன் பக்கம் சார்தல்
648.
வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும். சென்று எதிர்.
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து. கோசிகன்தன் மருங்கு எய்தினான்.
வந்து எதிர்ந்த - (இங்ஙனம்) வந்து தோன்றிய; முனிவனை
- அம் முனிவனை; வள்ளலும் - வரையாது அருள் செய்யும் இராமனும்;
சிந்தை ஆர - மனம் மகிழ; வணங்கலும் - அடி வீழ்ந்து
வணங்கியபின்; அந்தம் இல் குணத்தான் - எல்லையற்ற
நற்குணங்கள் வாய்ந்த அச் சதானந்த முனிவன்; ஆசிகள் நெடிது
தந்து - (இராமனுக்கு) ஆசி மொழிகள் மிகுதியும் கூறி; சென்று
எதிர் - (தன்னை) எதிர்கொண்ட; கோசிகன் தன் மருங்கு -
விசுவாமித்திரன் அருகில்; எய்தினான் - அடைந்தான்.
வள்ளல்: அகலிகைக்கு அருள் செய்தமை கருதியது. 85
