மீ. ப. சோமசுந்தரம்

மீ. ப. சோமசுந்தரம்

bookmark

வாழ்க்கை வரலாறு மீ. ப. சோமசுந்தரம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ஜூன் 17, 1921ஆம் ஆண்டு பிறந்தவர். மீ. ப. சோமசுந்தரம் ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது அவரது புனைப்பெயர். அவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை,கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசையியல் படித்து வித்வான் பட்டம் பெற்றவர். இவர் புதுமைப்பித்தனின் நண்பர். 1938-ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றார். அவர் 1946ல் இளவேனில் என்ற அவரது கவிதைத் தொகுப்பு வெளியானது. அக்கவிதைத் தொகுப்பு மாநில அரசின் விருது பெற்றது. இவருக்கு இசைபேரறிஞர் விருதும் கிடைத்தது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றி 1981 இல் ஓய்வு பெற்றார். அங்கு தலைமைத் தயாரிப்பாளராகவும், பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். அவரது பயணக் கட்டுரை அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள் 1962ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. அவர் எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் இசை ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவர் கடல் கண்ட கனவு, நந்தவனம், வண்ணில பொன்னரசி, எந்தையும் தாயும், கட்டுரைகள், கார்த்திகேயனி, ஐந்தருவி, பிள்ளையார் சாட்சி ஆகிய புதினங்களை எழுதியுள்ளார்.தமிழ்க்கலைக்களஞ்சியத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மீ. ப. சோமசுந்தரம், 1999-ல் மரணமடைந்தார்