உமறுப் புலவர்

உமறுப் புலவர்

bookmark

வாழ்க்கை வரலாறு உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார். முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர். செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் படியே உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபும் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் அபுல் காசீம் அவர்களை நூலின் பல இடங்களில் நினைவு கூர்ந்து போற்றுகிறார். உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.