மிதிலைக் காட்சிப் படலம் - 652

bookmark

சதானந்தர் கோசிகனைப் பாராட்டுதல்

652.

என்று கோசிகன். கூறிட. ஈறு இலா
வன் தபோதனன். ‘மா தவ! நின் அருள்
இன்றுதான் உளதேல். அரிது யாது. இந்த
வென்றி வீரர்க்கு?’ எனவும் விளம்பி. மேல்.
 
என்று  கோசிகன்  கூறிட  -  என்று விசுவாமித்திரன் சொன்ன
அளவில்;  ஈறு   இலா  -  எல்லையற்ற;   வன்  தபோதனன் -
கடுந்தவத்தையுடையவனான    சதானந்த    முனிவன்;   மாதவ  -
(விசுவாமித்திரனை நோக்கி)  மிக்க  தவமுடையவரே; நின் அருள் -
உமது  கருணை; இன்று உளதேல் - (இக்குமரர்களிடம்) இப்பொழுது
இருப்பதனால்;  இந்த  வென்றி வீரர்க்கு - வெற்றி வீரராகிய இந்த
இராமலக்குவர்க்கு;  அரிது - செய்யமுடியாத அருஞ்செயல்;  யாது -
என்ன   இருக்கின்றது    (ஒன்றுமில்லை);    எனவும்    விளம்பி 
- என்றும் கூறி; மேல் - மேலும்;

தபோதனன்: யாவரும் செல்வத்தை விரும்பிப் பாதுகாப்பது போலத்
தன் தவத்தை விரும்பிப் பாதுகாக்கும் முனிவன்.                89