மிதிலைக் காட்சிப் படலம் - 642

bookmark

642.

நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்
தாக்க. வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரைப்
பூக்கள் பட்டது அப் பூவையும் பட்டனள்.
 
நிக்கமின்றி - நீங்குதல் இல்லாமல்; நிமிர்ந்த - (எங்கும்) பரவிய;
நிலாக்கதிர் - கந்திரனின் ஒளிக்கதிர்; தாக்க - தாக்குவதால்; வெந்து
- (சீதை) உடல் வெதும்பி; தளர்ந்து - (மனம்) தளர்ந்து; சரிந்தனள் -
கீழே விழுந்தாள்; சேக்கை  ஆகி  -  (முன்பு  அவளுக்கு)  தங்கும்
இடமாகி; மலர்ந்த - விரிந்த; செந்தாமரைப் பூக்கள் -  செந்தாமரை
மலர்கள்  (இரவில்  அச்சீதைக்குப் படுக்கை மெத்தையாய்); பட்டது -
அவள்   புரண்டபோது  அவளது   காமச்   சூட்டினால்   அடைந்த
நிலைமகளை;  அப்  பூவையும்  -  அச்  சீதையும்;  பட்டனள்  -
அடையலானாள்; 

முன்பு     சீதைக்குத்  தங்கும்  இடமாகி  மலர்ந்த  செந்தாமரை
இப்பொழுது   பள்ளியணையாய்க்  காமவேதனையால்  புரண்டபோது
துன்பம்  தந்தது  என்க.   தாமரைப்  பூக்கள் பட்ட தன்மை: கூம்பிச்
சாம்பிப் பொலிவிழந்து வாடி  ஒடுங்கியமை. பூவை: உவமையாகுபெயர்.
                                                       79