மிதிலைக் காட்சிப் படலம் - 649

bookmark

சதானந்தன் முகமன் கூறுதல்

649.

கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன்தனை மா முகம் நோக்கி. ‘இப்
போது நீ இவண் போத. இப் பூதலம்
ஏது செய்த தவம்?’ என்று இய்மபினான்.*
 
கோதமன் தரு - கௌதம முனிவன் பெற்று அருளிய; கோ முனி
- முனிவர்  தலைவனான சதானந்தன் மாதவன் கோசிகன்  தனை -
பெருந்  தவத்தையுடைய  கௌசிக  முனிவனது மாமுகம்  நோக்கி -
திருமுகத்தைப்  பார்த்து இப்போது நீ இவண் - இப்பொழுது நீங்கள்
இவ்விடம்  போத  -  வருமாறு இப் பூதலம் - இந்த மிதிலை நகரம்;
செய்த    தவம்  -  பண்ணிய   தவம்;  ஏது  -  யாதோ; என்று 
இயம்பினான்- என்று உபசார மொழிகளைக் கூறலானான்.        86