மிதிலைக் காட்சிப் படலம் - 658

bookmark

கோசிகன் சுரபியைத் தருக என, வசிட்டன்
கூறுதல் (658-659)

சுரபியை அரசன் விரும்புதலும் முனிவர் விடையும்
 
658.

‘’மாதவ! எழுந்திலாய். நீ;
   வயப்புடைப் படைகட்கு எல்லாம்
கோது அறும் அமுதம் இக் கோ
   உதவிய கொள்கைதன்னால்.
தீது அறு குணத்தால் மிக்க
   செழு மறை தெரிந்த நூலோர்.
‘மே தகு பொருள்கள் யாவும்
   வேந்தருக்கு’ என்கைதன்னால்.
 
மாதவ  - பெருந்தவ முனிவரே!; நீ எழுந்திலாய் - நீவிர் (உமது
இருப்பிடத்தை விட்டு) எழுந்தீருமில்லை;  (இப்படி இருக்க) இக்கோ
-இந்தத் தெய்வப் பசு;  கோது  அறும்  அமுதம் - குற்றமற்ற நல்ல
உணவுகளை;      வயப்    புடை    -    வெற்றிதரும்;   படை
கட்கு  எல்லாம் - சேனைகள் எல்லாவற்றிற்கும்; உதவிய - கொடுத்து
உதவிய; கொள்கை தன்னால்  - சிறப்பு உடைமையாலும்; தீது அறு
குணத்தால் -  குறைவில்லாத  நற்குணங்களால்;  மிக்க  செழுமறை
- மிக்கவர்களும்  சிறந்த  வேதங்கள்  முதலிய;  தெரிந்த  நூலோர்
- கலைகளை  அறிந்தவர்களும்    ஆன   பெரியோர்கள்;   மேதகு
பொருள்கள் -  மேன்மையுள்ள பொருள்கள்; யாவும் வேந்தருக்கு -
எல்லாம்   அரசருக்கே;  என்கை  தன்னால்   -  உரியன  என்று
சொல்லுவதனாலும்.   

‘சிறந்த   பொருளைக் கொள்வதற்கு உரியவன் அரசன்’ மறைக்குச்
செழுமை. அறம் பொருள்.  இன்பம். வீடு  என்னும் நாற்பயன்களையும்
அளிக்கும் வன்மை.                                        95